வங்கதேச வீரர்கள் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அனுமதி!
வங்கதேச அணி வீரர்கள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கிவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

வங்கதேச அணி சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது.
இதனையடுத்து வங்கதேச அணியானது இம்மாதம் 17ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்பின் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரானது எதிர்வரும் மே 25ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
மேற்கொண்டு இத்தொடர்களுக்கான வங்கதேச டி20 அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் வங்கதேச டி20 அணியின் புதிய கேப்டனாக அனுபவ வீரர் லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் வங்கதேச அணியை திறம்பட வழிநடத்திய லிட்டன் தான் 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து வங்கதேச வீரர்கள் துபாயில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் நிலவியதன் காரணமாக பாகிஸ்தான் - வங்கதேச தொடரானது நடைபெறுமா என்ற கேள்விகள் எழுந்தன. ஏனெனில் பாகிஸ்தானில் நடைபெற்று வந்த பிஎஸ்எல் தொடரும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒத்திவைப்பட்டது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் கையெழுத்தான நிலையில், பிஎஸ்எல் தொடரின் எஞ்சிய போட்டிகள் மீண்டும் மே17ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இதனையடுத்து வங்கதேச அணி வீரர்கள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கிவுள்ளதாக கூறப்படுகிறது. சில வீரர்கள் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தாலும், யார் மீதும் எந்த அழுத்தமும் பிரயோகிக்கப்படாது என்று வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது. இப்போது பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கு முன், வீரர்கள் கலந்துரையாடல் மூலம் இறுதி முடிவை எடுப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
தற்போது இந்த சுற்றுப்பயணத்திற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாகவும், முறையான ஒப்புதல் கிடைத்தவுடன், வீரர்களுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவார்கள் என்றும் வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வங்கதேச அணி வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாடுவார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Also Read: LIVE Cricket Score
வங்கதேச டி20 அணி: லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன், சௌமியா சர்க்கார், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தாவ்ஹித் ஹ்ரிடோய், ஷமிம் ஹொசைன், ஜக்கர் அலி, ரிஷாத் ஹொசைன், மஹேதி ஹசன் (துணை கேப்டன்), தன்வீர் இஸ்லாம், முஸ்தாஃபிசூர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், தன்சிம் ஹசன் சாகிப், நஹித் ராணா மற்றும் ஷோரிபுல் இஸ்லாம்.
Win Big, Make Your Cricket Tales Now