
Anderson Likely To Be Rested In The 4th Test Against India (Image Source: Google)
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4ஆவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2ஆம் தேதி லண்டனிலுள்ள ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் சாம் பில்லிங்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து அணியின் துருப்புச்சீட்டாக விளங்கிய மூத்த வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்னுக்கு, நான்காவது டெஸ்ட் போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில் ஏற்கெனவே இங்கிலாந்து அணியில் சாகிப் மஹ்மூத் அணியில் இருக்க, தற்போது கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் ஆகியோரும் இங்கிலாந்து அணிக்கு திரும்பியுள்ளதால், இம்முடிவினை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.