
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஆஸ்திரேலியா அணி, ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரில் வருகிற ஜூன் 16ஆம் தேதி ஆரம்பித்து ஜூலை 26 ஆம் தேதி வரை விளையாடவுள்ளது. எப்படி இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி, உலக கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறதோ. அதேபோன்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறும் இந்த ஆஷஸ் தொடர், ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டிலும் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
கடந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை 4-0 என தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இதனால் தற்போது இங்கிலாந்து மண்ணில் நடக்கும் இந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றி தன்னுடைய தோல்விக்கு பழி தீர்த்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த தொடர் குறித்தான தன்னுடைய எதிர்பார்ப்புகளை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்., தற்போதைய நிலையில் இங்கிலாந்து அணி மிகவும் பலமாக உள்ளது என்றும் நிச்சயம் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணிக்கு தான் வெற்றி என்றும் தன்னுடைய எதிர்பார்ப்பை செய்தியாளர்களின் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.