Advertisement

ஆஸி.,யில் சதமடித்த நிதிஷ் ரெட்டிக்கு பரிசுத்தொகையை அறிவித்த ஆந்திரா கிரிக்கெட் சங்கம்!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய நிஷித் குமார் ரெட்டிக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகையை அறிவித்து ஆந்திரா கிரிக்கெட் சங்கம் கௌரவித்துள்ளது.

Advertisement
ஆஸி.,யில் சதமடித்த நிதிஷ் ரெட்டிக்கு பரிசுத்தொகையை அறிவித்த ஆந்திரா கிரிக்கெட் சங்கம்!
ஆஸி.,யில் சதமடித்த நிதிஷ் ரெட்டிக்கு பரிசுத்தொகையை அறிவித்த ஆந்திரா கிரிக்கெட் சங்கம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 29, 2024 • 06:16 AM

மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 474 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களைச் சேர்த்தார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 29, 2024 • 06:16 AM

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 82 ரன்களையும், விராட் கோலி 36 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறினர். பின்னர் ஜோடி சேர்ந்த நிதீஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.

Trending

இதில் அரைசதம் கடந்து அசத்திய வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களுடன் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த நிதீஷ் ரெட்டி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இறுதியில் நிதீஷ் ரெட்டி 114 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டனது. அதன்பின் தற்போது ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

 

Also Read: Funding To Save Test Cricket

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் சதமடித்து அசத்திய நிதீஷ் ரெட்டிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றது. அந்தவகையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நிதீஷ் ரெட்டி தனது முதல் சதத்தைப் பதிவு செய்ததை அங்கீகரிக்கும் விதமாக ஆந்திர கிரிக்கெட் வாரியம் ரூ.25 லட்சம் பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது.    

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement