
andre-fletcher-all-time-xi-ms-dhoni-and-rohit-sharma-in-his-list (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவர் ஆண்ட்ரே ஃபிளட்சர். இவர் தற்போது நடைபெற்றுவரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரிலும் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் தனது இடத்தை உறுதிசெய்துள்ளார்.
இந்நிலையில் ஆண்ட்ரே ஃபிளட்சர் தனது ஆல் டைம் பெஸ்ட் டி20 அணியைத் தேர்வு செய்துள்ளார். அதன்படி அவரது அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயில், ரொஹித் சர்மாவை தேர்வுசெய்துள்ளார்.
மேலும் 3ஆம் வரிசையில் விராட் கோலியைத் தேர்வு செய்த ஃபிளட்சர் தனது அணியின் கேப்டனாகவும் அவரையே தேர்ந்தெடுத்துள்ளார். பின் 4 வரிசையில் ஏபி டி வில்லியர்ஸையும், ஐந்தாம் வரிசையில் பென் ஸ்டோக்ஸையும் தேர்வுசெய்துள்ளார்.