Advertisement
Advertisement
Advertisement

ஆண்ட்ரே ரஸல் விளாசிய இமாலய சிக்ஸர்; வைரலாகும் காணொளி!

ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய ஆண்ட்ரே ரஸல் அடித்த இமாலய சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
ஆண்ட்ரே ரஸல் விளாசிய இமாலய சிக்ஸர்; வைரலாகும் காணொளி!
ஆண்ட்ரே ரஸல் விளாசிய இமாலய சிக்ஸர்; வைரலாகும் காணொளி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 06, 2024 • 12:56 PM

சிபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணியை எதிர்த்து டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஃபால்கன்ஸ் அணியானது இமாத் வசிம், ஃபேபியன் ஆலனின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், 176 ரன்களைச் செர்த்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 06, 2024 • 12:56 PM

இதில் அதிகபட்சமாக இமாத் வசீம் 46 ரன்களையும், ஃபகர் ஸமான் 38 ரன்களையும், ஜஸ்டின் க்ரீவ்ஸ் 37 ரன்களையும் சேர்த்தனர். நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் சுனில் நரைன் மற்றும் சலாம்கெயில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். 

Trending

அந்த அணியில் ஆண்டிரிஸ் கௌஸ் 39 ரன்களையும், பாரிஸ் 31 ரன்களையும், கேசி கார்டி 34 ரன்களையும் கேப்டன் கீரன் பொல்லார்ட் 30 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க மற்ற வீரர்கள் அனைவரும் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை மட்டுமே எடுத்தது. ஃபால்கன்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஃபேபியன் ஆலன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதன்மூலம் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியதுடன், நடப்பு சிபிஎல் தொடரில் தங்களின் முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. முன்னதாக அந்த அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் படுதோல்வியைச் சந்தித்தது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபேபியன் ஆலன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

 

Also Read: Funding To Save Test Cricket

இந்நிலையில் இப்போட்டியில் நைட் ரைடர்ஸ் அணியானது தோல்வியைத் தழுவினாலும், அந்த அணி வீரர் ஆண்ட்ரே ரஸல் அடித்த இமாலய சிக்ஸர் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி,ரோஷன் பிரிமஸ் வீசிய 18வது ஓவரில் இந்த சிக்சரை அடித்தார். அந்த சிக்ஸரானது 97 மீட்டருக்கு சென்றது. இதையடுத்து ஆண்ட்ரே ரஸல் விளாசிய இந்த இமாலய சிக்சர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement