Advertisement
Advertisement
Advertisement

காணொளி: அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றிய ரஸல்!

வாரியர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரஸல் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது.

Advertisement
காணொளி: அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றிய ரஸல்!
காணொளி: அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றிய ரஸல்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 19, 2024 • 01:11 PM

கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய கயானா அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் நட்சத்திர வீரர்கள் கெவின் சின்க்ளேர் 9, கேப்டன் ஷாய் ஹோப் 5, ஷிம்ரான் ஹெட்மையர் 7, மொயீன் அலி 11 ரன்களுக்கு என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 19, 2024 • 01:11 PM

இறுதியில் ஜோடி சேர்ந்த ரொமாரியோ ஷெஃபெர்ட் - டுவைன் பிரிட்டோரியர்ஸ் இணை அதிரடியாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரொமாரியோ ஷெஃபெர்ட் அரைசதம் கடந்து அசத்தினார். மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரொமாரியோ ஷெஃபெர்ட் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 51 ரன்களையும், டுவைன் பிரிட்டோரியஸ் 21 ரன்களையும் சேர்க்க, கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களைச் சேர்த்தது. 

Trending

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பேரிஸ் 29 ரன்களுக்கும், சுனில் நரைன் 11 ரன்களுக்கும், கேசி கார்டி 10 ரன்களுக்கும், நிக்கோலஸ் பூரன் 19 ரன்களுக்கும், கேப்டன் கீரன் பொல்லார்ட் 8 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த டிம் டேவிட் மற்றும் ஆண்ட்ரே ரஸல் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

 

Also Read: Funding To Save Test Cricket

அதேசமயம் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய நைட் ரைடர்ஸ் அணி வீரர் ஆண்ட்ரே ரஸல் ஆட்டநாயகன் விருதை வென்றர். இந்நிலையில் இப்போட்டியின் ஒருகட்டத்தில் ஆட்டத்தின் வெற்றியானது நைட் ரைடர்ஸ் அணியின் கையைவிட்டு நழுவிச் சென்றது. அப்போது களத்திற்கு வந்த ஆண்ட்ரே ரஸல் அடுத்த 6 பந்துகளில் 4 சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றியதுடன், இப்போட்டியில் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 36 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இந்நிலையில் ஆண்ட்ரே ரஸல் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement