
டி20 கிரிக்கெட்டிற்கான முக்கியத்துவம் குறையும் அளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் லீக், கரீபியன் பிரிமியர் லீக் நிர்வாகங்கள் இணைந்து 6IXTY என்னும் 10 ஓவர் கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போட்டிக்கான விதிமுறைதான் ஹைலைட்டே. ஒவ்வொரு அணியும் 6 விக்கெட் வரை களமிறக்கலாம். 6 விக்கெட்கள் முடிந்த பிறகு, ஆல்-அவுட் என அறிவிக்கப்படும்.
ஒவ்வொரு அணிக்கும் இரண்டு ஓவர்கள் பவர் பிளே உண்டு. முதல் 12 பந்துகளில் 2 சிக்ஸர்களை அடித்தால் மட்டுமே, மூன்றாவது பவர் பிளே கிடைக்கும். அந்த பவர் பிளேவை 3 முதல் 9 ஓவர்களுகுள் எடுத்துக்கொள்ளலாம். முதல் 5 ஓவர்களை, ஒரே என்டில் இருந்துதான் பந்துவீச வேண்டும். அடுத்த 5 ஓவருக்கு எதிர் பெவிலியன் என்டில் இருந்து பந்துவீச வேண்டும்.
இப்படி புது விதிமுறைகள் அதிகம் இருப்பதால் இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும், வெஸ்ட் இண்டீஸில் இந்த தொடர் நடைபெறும் என்பதால் காட்டடிக்கு பஞ்சமிருக்காது எனவும் கருதப்பட்டது. இறுதியில் அதேபோல்தான் நடைபெற்று வருகிறது.