
நாளை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் தொடங்க இருக்கும் பதினாறாவது ஆசியக் கோப்பை தொடர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் இந்த முறை நடக்கிறது. ஆசியக் கோப்பை தொடர் இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதோ, அதே அளவுக்கு விராட் கோலி மீண்டும் பழைய படி திரும்பி வந்து விட்டாரா இல்லையா என்பதை முடிவு செய்வதற்கும் முக்கியமானதாக இருக்கிறது.
ஏனென்றால் ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களுக்கும் ஏதாவது ஒரு கிரிக்கெட் வடிவத்தில் மிகச் சிறப்பாக இருப்பார்கள். விராட் கோலிக்கு ஒருநாள் கிரிக்கெட் வடிவம்தான் மிகச் சிறப்பான ஒன்று. ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்களை சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக அடித்திருக்க, 46 சதங்கள் அடித்து அதை வெகு எளிதாக முறியடிக்க கூடிய இடத்தில் விராட் கோலி இருக்கிறார்.
எனவே நடப்பு ஆசியக் கோப்பை தொடர் விராட் கோலிக்கு மிகவும் முக்கியமான ஒரு தொடராக இருக்கிறது. மேலும் அவர் உலகக் கோப்பையில் எப்படி இருப்பார்? என்கின்ற எதிர்பார்ப்பும் இதனோடு தொடர்புடைய ஒன்றாக இருக்கிறது. எனவே தனிப்பட்ட முறையிலேயே விராட் கோலிக்கு பெரிய அழுத்தம் இருக்கிறது.