மகளிர் டெஸ்ட்: வலிமையான ஸ்கோரை நிர்ணயித்த இங்கிலாந்து; சவாலை சமாளிக்குமா இந்தியா?
இந்திய மகளிருக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 396 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது.
இந்திய மகளிர், இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான ஒரு டெஸ்ட் ஆட்டம் நேற்று (ஜூன்16) தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹீத்தர் நைட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து மகளிர் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. சோபியா டாங்க்லி 12 ரன்களுடனும், கேத்ரின் பிரண்ட் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
Trending
இதையடுத்து இன்று நடைபெற்ற 2ஆம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பிரண்ட் 8 ரன்களுக்கு ஜுலான் கோஸ்வாமியிடம் ஆட்டமிழந்தார். இதையடுத்து, டன்க்லேவுடன் சோபி எக்லெஸ்டோன் இணைந்தார். இந்த இணை இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியளித்தது. எக்லெஸ்டோன் நிதானம் காட்ட டாங்க்லி ரன்களைக் குவித்து வந்தார்.
இதனால் 8ஆவது விக்கெட்டுக்கு இந்த இணை 56 ரன்கள் சேர்த்த நிலையில் எக்லெஸ்டோன் 17 ரன்களுக்கு தீப்தி சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். எனினும், அடுத்து களமிறங்கிய அன்யா ஷ்ருப்சோலும் ரன் குவிக்க மீண்டும் ஒரு பாட்னர்ஷிப் அமைந்தது.
பின்னர் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிகளர் செய்வதாக அறிவித்தது. அந்த அணியில் சோபியா டாங்க்லி 74 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி தரப்பில் ஸ்நே ராணா 4 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கி உள்ள இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. இதனால் 13 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 41 ரன்களைச் சேர்த்து விளையாடி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now