
Archer one bowler I would really like to face, says Yash Dhull (Image Source: Google)
சமீபத்தில் அண்டர் 19 உலகக் கோப்பைப் போட்டியை வென்ற இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய டெல்லி வீரர் யாஷ் துல், தமிழகத்துக்கு எதிரான அறிமுக ரஞ்சி ஆட்டத்தில் இரு சதங்கள் அடித்து அசத்தினார். இவரை ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணி ரூ. 50 லட்சத்துக்கு தேர்வு செய்தது.
இதுகுறித்து பேசிய அவர், “ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணி என்னைத் தேர்வு செய்யும் என எதிர்பார்த்தேன். ஏனெனில் அவர்களுடைய அகாதெமியில் நானும் பங்கேற்றுள்ளேன். ரிக்கி பாண்டிங்கைச் சந்தித்து அவருடைய வழிகாட்டலில் விளையாட ஆர்வமாக உள்ளேன்.
ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சை எதிர்கொள்ள விருப்பம் உள்ளது. அவர் மிகவும் வேகமாகப் பந்துவீசுவார். ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்காக வார்னருடன் இணைந்து விளையாடினால் நன்றாக இருக்கும்.