
இந்திய கிரிக்கெட்டுக்கு பெங்களூரில் அமைந்துள்ள நேஷனல் கிரிக்கெட் அகாடமி என்சிஏ வீரர்களின் காயம் மற்றும் உடல் தகுதி ஆகியவைப் பற்றி மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், தனிப்பட்ட வீரர்களின் திறன் வளர்த்தல் அளவிலும் செயல்படுகிறது. தற்பொழுது நேஷனல் கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ்.லக்ஷ்மன் இருந்து வருகிறார்.
அவரது யோசனையில் 20 பேர் கொண்ட இந்திய இளம் ஆல்ரவுண்டர்களுக்கு 20 நாட்கள் நேஷனல் கிரிக்கெட் அகாடமியில் அவர்களை வைத்துப் பட்டை தீட்ட முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அந்த 20 பேர் கொண்ட குழுவில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் இடம்பிடித்துள்ளார்.
இது குறித்து பிசிசிஐ அதிகாரிகள் பேசும் பொழுது, "இந்த ஆண்டின் பிற்பகுதியில் அண்டர் 23 ஆசியக்கோப்பை போட்டி நடக்க இருக்கிறது. மேலும் திறமையான இளம் வீரர்களை பிசிசிஐ எதிர்பார்க்கிறது. ஆல் ரவுண்டர்கள் முகாம் என்பது லக்ஷ்மன் அவர்களின் யோசனையாகும். இதில் எல்லா வடிவ கிரிக்கெட் விளையாடும் இளம் வீரர்களும் இடம்பெற்று இருக்கிறார்கள்.