
தென் ஆப்பிரிக்கா - இந்தியா இடையேயான மூன்றாவது டி20 போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக தேர்வு செய்ததை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது.
அதன்படி விளையாடிய இந்திய அணியில் திலக் வர்மா தனது முதல் சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 107 ரன்களைச் சேர்த்தார். அவருக்கு துணையாக விளையாடிய அபிஷேக் சர்மா 50 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்களை குவித்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஆண்டில் சிமலனே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 220 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் ரிக்கெல் ரிக்கெல்டன் 20 ரன்னும், ஹென்ரிக்ஸ் 21 ரன்னும், மார்க்ரம் 29 ரன்னும், ஸ்டப்ஸ் 12 ரன்னும், டேவிட் மில்லர் 18 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதேசமயம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நம்பிக்கை கொடுத்த ஹென்ரிச் கிளாசென் 41 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.