
இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டனான பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி 338 ரன்கள் குவித்திருந்தது.
போட்டியின் இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டத்திலும் மிக சிறப்பாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் தனது மூன்றாவது சதத்தை பதிவு செய்துவிட்டு 194 பந்துகளில் 104 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். இதன்பிறகு களத்திற்கு வந்த பும்ராஹ், இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓரே ஓவரில் 28 ரன்கள் குவித்து மாஸ் காட்டியதோடு 16 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் குவித்தது.