
அதிரடி மன்னன் விரேந்திர சேவாக் கங்குலியினால் ஊட்டி வளர்க்கப்பட்டவர், தோனியால் ஓரங்கட்டப்பட்டவர். தன்னிலே சேவாக் ஒரு கேப்டன்சி வீரர்தான், இவருக்கு தெரிந்த கிரிக்கெட் நுணுக்கங்களால்தான் மொஹீந்தர் அமர்நாத் இவரைக் கேப்டனாக்கி தோனியை கேப்டன்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார், ஆனால் அப்போதைய பிசிசிஐ தலைவர் அமர்நாத் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டார்.
இல்லையெனில் அயல்நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் வரிசையாக உதை மேல் உதை வாங்கும் வேறு எந்த கேப்டனும் தோனி மாதிரி தன்னை கேப்டனாக தக்க வைத்திருக்க முடியாது என்பதுதான் பலரும் இன்று முன் வைக்கும் விமர்சனமாகும். சேவாக், கங்குலி, தோனி இருவரின் கேப்டன்சியிலும் ஆடியிருக்கிறார்.
இன்று 40 வயதில் தோனி ஆடுகிறார் ஆனால் சேவாக், யுவராஜ், ரெய்னாவைக் காணோம். அன்று 2011 உலகக்கோப்பை ஆடிய சேவாக், ஹர்பஜன், யுவராஜ், ஜாகீர் கான் உள்ளிட்ட வீரர்கள் 2015 உலகக்கோப்பை வரையிலும் ஆடக்கூடிய திறமையுடன் தான் இருந்தனர் ஆனால் ஓரங்கட்டி விட்டார் என்று ஹர்பஜன் வைத்த குற்றச்சாட்டு கவனிக்கத்தக்கது.