
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், நடப்பாண்டு ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்திவைப்பதாக பிசிசிஐ தெரிவித்தது. மேலும் நடப்பு சீசனில் இதுவரை 29 லீக் போட்டிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது.
இன்னும் 30 போட்டிகள் வரை மீதம் இருக்கிறது. இதனால் மீதமுள்ள போட்டிகளை எல்லாம் எப்போது ? நடத்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வாறு ஐபிஎல் தொடரை பாதியிலயே நிறுத்தப்பட்டிருப்பது ரசிகர்களிடயையே அதிரச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஐபிஎல்லில் பங்கேற்றக்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் என அனைவரது நலனை கருதி தான் இந்த முடிவை எடுத்ததாக அறிவித்தனர். அதுமட்டுமின்றி, ஐபிஎல்லில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் முழு பொறுப்பையும் பிசிசிஐ ஏற்றுள்ளது.