ASHES 2021-22 UPDATE: Alex Carey To Replace Tim Paine As Australian Wicketkeeper (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் டிசம்பர் 8ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் தனது கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இருந்தாலும் ஆஸ்திரேலிய அணியில் ஒரு வீரராக நீடிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் சில நாட்களுக்கு முன் கிரிக்கெட்டிலிருந்து சிறுது காலம் ஓய்வெடுக்க உள்ளதாகவும், அதனால் ஆஷஸ் டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார்.