
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இதில் கேப்டன் பென் ஸ்டோக்ஸின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 237 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து 26 ரன்களுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி டிராவிஸ் ஹெட்டின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் அனைத்து விக்கெட்டுகளையும் இழது 224 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 251 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.