ஆஷஸ் 2023: இங்கிலாந்தை திணறவைத்த ஆஸி; கவாஜா, லபுஷாக்னே நிதானம்!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்களைச் சேர்த்துள்ளது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகப் புகழ்பெற்ற ஆஷஸ் கிரிக்கெட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி அதிரடியாக வெற்றி பெற்றது.
இந்த நிலையில் மிக முக்கியமான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தா அணி மிக அபாரமாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவை விட முதல் இன்னிங்ஸ் முன்னிலையைப் பெற்று இருந்தது. ஆனால் போட்டியின் நான்காவது ஐந்தாவது நாளில் பெய்த மழை, ஆஸ்திரேலியா அணியை மீண்டும் ஆஷஸ் தொடரை தக்க வைக்க உதவி செய்தது.
Trending
இந்நிலையில் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். வழக்கம்போல இங்கிலாந்து அணியின் துவக்க ஜோடி அதிரடியில் ஈடுபட்டது. அதிரடியாக விளையாடிய பென் டக்கட் 41 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
மற்றொரு தொடக்க வீரர் ஸாக் கிரௌலியும் 37 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன்பின் மொயீன் அலி 47 பந்தில் 34 ரன்கள் எடுத்து வெளியேறினார். நட்சத்திர ஆட்டக்காரர் ஜோ ரூட் ஐந்து ரன்னில் நடையை கட்ட இங்கிலாந்து அணி பெரிய நெருக்கடியில் விழுந்தது.
இந்த நிலையில் ஐந்தாவது விக்கட்டுக்கு களம் வந்த இளம் வீரர் ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி 91 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 85 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3, ஜானி பேர்ஸ்டோவ் 4 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார்கள்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 283 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா - டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவிட் வார்னர் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த உஸ்மான் கவாஜா - மார்னஸ் லபுசாக்னே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தனர்.
இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்களைச் சேர்த்தது. இதில் உஸ்மான் கவாஜா 26 ரன்களுடனும், மார்னஸ் லபுசாக்னே 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now