
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ஹெட்டிங்கிலேவில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர்(4) போட்டியின் முதல் ஓவரிலேயே ஸ்டூடவர்ட் பிராட் பந்தில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து உஸ்மான் கவாஜா(13) மார்க் வுட் வீசிய அதிவேக பந்தில் கிளீன் போல்ட் ஆனார். அடுத்து வந்த மார்னஸ் லபுஜானே 21 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தபோது கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தில் ரூட் வசம் பிடிபட்டு வெளியேறினார்.