Advertisement

ஆஷஸ் 2023: ஆஸிக்கு 280 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கி.!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாண்து அணி 280 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 

Advertisement
Ashes 2023: England's lower-order added crucial runs to set Australia a challenging target in the fo
Ashes 2023: England's lower-order added crucial runs to set Australia a challenging target in the fo (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 19, 2023 • 08:58 PM

பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 78 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 393 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதியில் ஜோ ரூட் 152 பந்துகளில், 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 118 ரன்கள் விளாசினார். கைவசம் 2 விக்கெட்கள் இருந்த போதிலும் முதல் நாளிலேயே இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிக்ளேர் முடிவை எடுத்தது ஆச்சரியமாக இருந்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 19, 2023 • 08:58 PM

இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய உஸ்மான் கவாஜாவின் அபாரமான சதத்தாலும், அலெக்ஸ் கேரி, டிராவிஸ் ஹெட் ஆகியோரது அரைசதத்தின் மூலமாகவும் 386 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், ஒல்லி ராபின்சன் தலா 3 விக்கெட்டுகளையும், மொயீன் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Trending

இதையடுத்து 7 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஸாக் கிரௌலி 7 ரன்களுக்கும், பென் டக்கெட் 19 ரன்களிலும், ஒல்லி போப் 14 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் - ஹாரி ப்ரூக் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

இதில் இருவரும் அரைசதம் கடப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தலா 46 ரன்களைச் சேர்த்திருந்த ரூட் மற்றும் ப்ரூக் இருவரும் நாதன் லையன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டொக்ஸும் தனது பங்கிற்கு 43 ரன்களை எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

பின்னர் வந்த ஜானி பேர்ஸ்டோவ் 20, மொயீன் அலி 19, ஒல்லி ராபின்சன் 27, ஜேம்ஸ் ஆண்டர்சர் 12 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரெலிய அணி தரப்பில் நாதன் லையன், பாட் கம்மின்ஸ் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 280 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் இன்னும் 4 ஷெசன்கள் மீதமுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி வாய்ப்பே அதிகமாகவுள்ளது குற்பிபிடத்தக்கது.  

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement