
ஆஸ்திரேலிய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுவற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இரு அணிகள் இடையே பர்மிங்ஹாமில் நடந்த பரபரப்பான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை (28ஆம் தேதி) தொடங்குகிறது. முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.
கடந்த தோல்வியில் இருந்து மீண்டு இங்கிலாந்து இந்த டெஸ்டில் வெற்றி பெற கடுமையாக போராடும். இந்நிலையில் இப்போட்டிகான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகான இங்கிலாந்து அணியில் மொயீன் அலி காயம் காரணமாக விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக ஜோஷ் டங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.