
Ashes schedule confirmed, England and Australia to play final Test in Perth (Image Source: Google)
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆஷஸ் எனப்படும் டெஸ்ட் தொடர் நடத்தப்படுவது வழக்கம். அதன்படின் 2021/22ஆம் ஆண்டிற்கான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஆட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆகியவை இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி தொடரின் முதல் போட்டியானது இந்தாண்டு டிசம்ப 8ஆம் தேதி கபா மைதானத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்னில் நடைபெறவுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டு கிரிக்கெட் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.