
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறும் பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மானப் பிரச்சினையாக ஆஷஸ் தொடர் அமைந்துள்ளது.
இதனால் இழந்த ஆஷஸ் கோப்பையை மீண்டும் கைப்பற்றும் முனைப்புடன் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது. ஆனால், ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை இங்கிலாந்தில், ஆஷஸ் டெஸ்ட் தொடரை வென்று 22 ஆண்டுகள் ஆகிறது. இந்த வரலாற்றை மாற்றும் முனைப்புடன் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய வீரர்கள் உள்ளனர்.
கடந்த முறை கூட ஆஷஸ் தொடரை சமன் செய்தே ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது. இந்த நிலையில் ஆஷஸ் தொடர் குறித்து இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக் பேசுகையில், “ஆஸ்திரேலிய அணியின் அதிக வேகம் வீசக்கூடிய வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். அவர்கள் எவ்வளவு வேகமாக பந்துவீசுகிறார்களோ, அவ்வளவு வேகமாக பந்து பவுண்டரிக்கு செல்லும்.