மூன்று பேர் கொண்ட் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவை அறிவித்தது பிசிசிஐ!
அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்சபே மற்றும் சுலக்ஷனா நாயக் அடங்கிய மூன்று பேர் கொண்ட ஆலோசனை குழுவை அறிவித்தது பிசிசிஐ.
ஆசிய கோப்பை, டி 20 உலகக் கோப்பை தொடர்களில் அடுத்தடுத்து தோல்வியடைந்த காரணத்தால் இந்திய அணியின் தேர்வாளர் குழுவான சேட்டன் சர்மா தலைமையிலான குழு அப்படியே நீக்கப்பட்டது. இந்த குழு மீது கடுமையான புகார்கள் வைக்கப்பட்டன.
கே எல் ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்தது, வருடம் முழுக்க பல்வேறு சோதனை முயற்சிகளை செய்துவிட்டு, வருட கடைசியில் அதே பழைய அணியை 2022 டி 20 உலகக் கோப்பை அணிக்கு அனுப்பியது, அணியில் மாற்று வீரர்களை சரியாக தேர்வு செய்யாதது என்று கடுமையான புகார்கள் வைக்கப்பட்டன. அதோடு சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றும் புகார் வைக்கப்பட்டது.
Trending
இதையடுத்தே தேர்வுக்குழு மொத்தமாக நீக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய தேர்வுக்குழுவிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு உள்ளன. பிசிசிஐ தேர்வுக்குழுத் தலைவர் அல்லது உறுப்பினராக முன்னாள் வீரர்களான நயன் மோங்கியா, மனிந்தர் சிங், ஷிவ் சுந்தர் தாஸ், அஜய் ராத்ரா போன்றோர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியன.இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹேமங் பதானி இந்த பொறுப்பிற்கு விண்ணப்பித்ததாக கூறப்பட்டது. ஆனால் இதை அவர் மறுத்துள்ளார்.
இந்நிலையில் மூன்று பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழுவை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அதன்படி அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்சபே மற்றும் சுலக்ஷனா நாயக் ஆகியோர் இக்குழுவில் இடம்பிடித்துள்ளாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதில் அசோக் மல்ஹோத்ரா இந்திய அணிக்காக 7 டெஸ்ட் மற்றும் 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.அதேபோல் ஜதின் பரஞ்சபே இந்திய அணிக்காக 4 ஒருநாள் போட்டிகளில் விளையடியுள்ளார். சுலக்ஷனா நாயக் இந்தியாவுக்காக இரண்டு டெஸ்ட், 41 ஒருநாள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now