
வங்கதேச அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியானது அபாரமான வெற்றியைப் பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
அதன்படி இன்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. மேலும் இப்போட்டியில் இரு இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்து அசத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருதையும், இத்தொடரில் சதம் மற்றும் 11 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர் நாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இத்தொடரில் தொடர் நாயகன் விருதை வென்று அசத்திய ரவிச்சந்திரன அஸ்வின், இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார். அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றி அதிக தொடர்நாயகன் விருதை வென்ற வீரர் எனும் சாதனையை இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 11 டெஸ்ட் தொடர் நாயகன் விருதை வென்று படைத்திருந்தார்.