ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கரோனா உறுதி!
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து தொடரில் பங்கேற்க அஸ்வின் செல்லவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டி வரும் 1ஆம் தேதி தொடங்குகிறது.
தற்போது அஸ்வின், அந்த தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாகிவிட்டது. இங்கிலாந்துக்கு இந்திய அணி கடந்த 16ஆம் தேதி சென்றது. அதில் அஸ்வின் இடம்பெறாத நிலையில், தற்போது கரோனா தொற்று காரணமாக தான் அவர் பங்கேற்காதது தெரியவந்துள்ளது. அஸ்வின் தற்போது வீட்டில் தன்னை தனிமைப்படுத்தியுள்ளார். இதனால் வரும் 24ஆம் தேதி தொடங்கும் பயிற்சி ஆட்டத்தில் அஸ்வின் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Trending
ஐபிஎல் தொரின் இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு அஸ்வின், தமிழ்நாடு லீக் டிவிசன் வீரர்களுடன் தனது நேரத்தை செலவிட்டார். இதில் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. அஸ்வன் வெறும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்காக மட்டும் இங்கிலாந்து செல்ல வேண்டிய நிலையில், தற்போது கரோனா தொற்று ஏற்பட்டதால் அந்த வாய்ப்பு ஜடேஜாவுக்கு கிடைத்துள்ளது.
அஸ்வின் தற்போது டெஸ்ட் போட்டியில் மட்டும் தான் விளையாடுகிறார். இந்திய அணி இனி 6 மாதங்களுக்கு டெஸ்ட் போட்டியே விளையாடாத நிலையில், அஸ்வின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு இந்த நிகழ்வு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. கடந்த முறை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அஸ்வின் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
ஆனால், அதன் பிறகு டி20 உலககோப்பை, நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டி, டெஸ்ட் தொடர் என தொடர்ந்து விளையாடிய அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் ஹர்பஜன் சிங், கபில்தேவ் ஆகியோரை அஸ்வின் பின்னுக்கு தள்ளி 2ஆவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now