
நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் அணியில், டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருந்தும் தமிழக வீரர் அஸ்வினுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. இந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வி அடைந்து பட்டத்தை இரண்டாவது முறையாக தவறவிட்டது. இதனால் இந்திய கேப்டன் மற்றும் பயிற்சியாளர் அணித்தேர்வு பலரது விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது.
இதில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஆதங்கத்தை மிகவும் நாகரிகமாக முறையில் அதே சமயத்தில் என்ன செய்தால் சரியாக இருக்கும் என்றோம் சில இடங்களில் வெளிப்படுத்தி வருகிறார். நேற்று இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், “முதலில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா அணியினருக்கு வாழ்த்துக்கள். அவர்கள் இதற்கு மிகத் தகுதியானவர்கள். லபுசேன் போன்ற சில வீரர்கள் மட்டும் சில நாட்கள் சேர்த்து இங்கிலாந்தில் விளையாடியிருந்தார்கள்.
இது ஒரு சிறிய நன்மை மட்டுமே. ஆனால் இதுவெல்லாம் ஒரே ஒரு ஆட்டத்தில் பட்டம் என்கின்ற பெரிய ஆட்டத்திற்குப் பொருந்தாது. இந்தியா போன்று அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரக்கூடியவர்கள். இந்தத் வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள். அடுத்து இந்திய அணிக்கு உலகக்கோப்பை வருகிறது. சமூக வலைதளத்தில் அந்த வீரரை நீக்கு இந்த வீரரை எடு என்று பல கருத்துகளை என்னால் பார்க்க முடிகிறது. ஒரு வீரரின் தரம் ஒரே போட்டியில் எல்லாம் மாறிவிடாது.