Advertisement
Advertisement
Advertisement

வங்கதேச டெஸ்ட் தொடரில் சாதனைகளை குவித்த அஸ்வின்!

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதை வென்ற ரவிச்சந்திரன் அஸ்வின் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார்.

Advertisement
வங்கதேச டெஸ்ட் தொடரில் சாதனைகளை குவித்த அஸ்வின்!
வங்கதேச டெஸ்ட் தொடரில் சாதனைகளை குவித்த அஸ்வின்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 22, 2024 • 02:50 PM

இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 22, 2024 • 02:50 PM

அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது.  இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 114 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியானது  பும்ரா மற்றும் அர்ஷ்தீப் ஆகியோரின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

Trending

இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்களை குவித்திருந்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 119 ரன்களையும், ரிஷப் பந்த் 109 ரன்களையும் சேர்த்திருந்தனர். இதன்மூலம் வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்காகவும் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ அரைசதம் அடித்து அசத்தினார். 

ஆனால் மற்ற வீரர்களில் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறினர். இதனால் வங்கதேச அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கி தொடரில் முன்னிலையும் பெற்று அசத்தியுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். அதன்படி, இப்போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றிஅ சத்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 522 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் கர்ட்னி வால்ஷை (519 விக்கெட்டுகள்) பின்னுக்கு தள்ளி ரவிச்சந்திரன் அஸ்வின் 8ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்த பட்டியலில் முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, ஜேம்ஸ் ஆண்டர்சன் அகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

Also Read: Funding To Save Test Cricket

மேலும் இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் இரண்டாம் இடத்தை பகிர்ந்துள்ளார். முன்னதாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே 37 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது அஸ்வினும் 37 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இலங்கை முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் 67 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement