Advertisement

ஆசிய கோப்பை 2022: குர்பாஸ் அதிரடி; இலங்கைக்கு 176 டார்கெட்!

இலங்கை அணிக்கெதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 03, 2022 • 21:22 PM
Asia Cup 2022: Afghanistan finishes off 175/6 on their 20 overs
Asia Cup 2022: Afghanistan finishes off 175/6 on their 20 overs (Image Source: Google)
Advertisement

ஆசிய கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை, ஆஃப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் முன்னேறியுள்ளன.

அதன்படி இன்று நடைபெர்ர இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.

Trending


இதையடுத்து களமிறங்கிய ஆஃப்கான் அணிக்கு ஹஸ்ரதுல்லா ஸஸாய் - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஸஸாய் 13 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.

பின்னர் ஜோடி சேர்ந்த குர்பாஸ் - இப்ராஹிம் சத்ரான் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் கடந்திருந்த குர்பாஸ் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 84 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

இதையடுத்து மறுமுனையில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இப்ராஹிமும் 40 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய முகமது நபி, நஜிபுல்லா ஸத்ரான் ஆகியோரும் சொற்ப ரன்களோடு ஆட்டமிழந்தனர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் தில்சன் மதுஷங்கா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement