
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக் கோப்பை தொடரானது துவங்க உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஹாங்காங் என ஆறு நாடுகள் கலந்து கொள்ளும் இந்த தொடரானது ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை துபாய் மற்றும் ஷார்ஜியா ஆகிய மைதானங்களில் நடைபெற இருக்கிறது.
இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் பயணித்து பயிற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில் சில அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு அவர்கள் இந்த தொடரில் இருந்து வெளியேறியது நாம் அறிந்ததே.
அந்த வகையில் ஏற்கனவே பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி இந்த ஆசிய கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக வெளியேறியது அந்த அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு வீரர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.