
ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா, தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்த நிலையில் இன்று இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது. இதில் இந்தியா வெற்றிபெறவில்லை என்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாது.
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல் இன்னமும் சரியான துவக்கத்தை தரவில்லை. கோலி மட்டுமே தொடர்ச்சியாக நம்பிக்கையளிக்க கூடிய வகையில் விளையாடி வருகிறார். மற்றபடி ஹார்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் போன்றவர்கள் ஆட்டம் வாய்த்தால் மட்டுமே அதிரடி காட்டுவதால், இவர்களையும் முழுமையாக நம்ப முடியவில்லை.
இலங்கை அணியில் சொதப்பல் வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்பதால், இன்று டெத் ஓவர்களில் இந்த மூன்று பேரும் காட்டடி அடித்து ரன்களை குவிக்க வாய்ப்புள்ளது. ஆவேஷ் கான் காயம் காரணமாக விலகிய நிலையில் ஹார்திக் பாண்டியா கடந்த போட்டியில் 4 ஓவர்களையும் வீசி 44 ரன்களை விட்டுக்கொடுத்து சொதப்பினார்.