என்னுடைய கேரியரில் இது இரண்டாவது சிறந்த இன்னிங்ஸ் ஆக அமையும் - சரித் அசலங்கா!
நான் விளையாட்டை முடித்துக் கொடுக்க இருந்தேன். அணியில் என்னுடைய ரோலும் அதுதான். என்னுடைய கேரியரில் இது இரண்டாவது சிறந்த இன்னிங்ஸ் ஆக அமையும் என்று சரித் அசலங்கா தெரிவித்துள்ளார்.
தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி தற்போது சூப்பர் போர் சுற்று ஆட்டத்திலும் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
அதன்படி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற சூப்பர் போர் சுற்றின் ஐந்தாவது ஆட்டத்தில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 42 ஓவரில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 252 ரன்களை குவித்தது. பின்னர் 253 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணி போட்டியின் கடைசி பந்தில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
Trending
இந்த போட்டியில் இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குசால் மெண்டிஸ் 87 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 91 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
அந்த இடத்தில் கடைசி ஓவருக்கு எட்டு ரன்கள் தேவைப்பட, அங்கிருந்து கடைசி இரண்டு பந்துகளுக்கு ஆறு ரன்கள் என்று மாறியது. கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் பவுண்டரி மற்றும் ஆறாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து, மிகப்பெரிய அழுத்தத்தில் அசலங்கா அணியை வெல்ல வைத்தார். அவர் 47 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார்.
போட்டி முடிந்த பிறகு பேசிய அசலங்கா, “பெரிய மைதானம் என்பதால் கேப்பில் அடித்து இரண்டு ரன்கள் ஓடுவது எப்படி என்பது குறித்து நான் யோசித்துக் கொண்டிருந்தேன். நான் மதிஷாவை மிகவும் கடினமாக ஓடச் சொன்னேன். எப்படியும் இரண்டு ரன்கள் எடுக்கவே முயற்சி செய்யலாம் என்று சொன்னேன். அப்போது என் மனதில் இரண்டு விஷயங்கள் இருந்தது. ஒன்று அவர் பவுன்சர் வீசுவார் இல்லை யார்க்கர் வீசுவார் என்று நினைத்தேன்.
ஆனால் அவர் நேராக மெதுவான பந்தை வீசினார். அது எனக்கு மிகவும் வசதியாகிப் போனது. நான் இது குறித்து இப்பொழுதும் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். குசலும் சதிராவும் நன்றாக விளையாடி நல்ல வலிமையான அடிப்படையை உருவாக்கினார்கள். நான் விளையாட்டை முடித்துக் கொடுக்க இருந்தேன். அணியில் என்னுடைய ரோலும் அதுதான். என்னுடைய கேரியரில் இது இரண்டாவது சிறந்த இன்னிங்ஸ் ஆக அமையும்” என்று கூறினார்.
Win Big, Make Your Cricket Tales Now