11-mdl.jpg)
நடப்பாண்டு ஆசிய கோப்பை தொடருக்கான அட்டவணை தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் திட்டமிட்டபடியே போட்டி ஹைபிரிட் மாடலில் நடைபெறுகிறது. நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும் மற்ற ஒன்பது போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்படுகின்றன. இந்தத் தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 2ஆம் தேதி இலங்கையில் உள்ள கேண்டி நகரில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 4 ஆம் தேதி இந்தியாவும் நேபாளும் மோதுகிறது. இதைத்தவிர ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானும் நேபாளமும் முல்தான் நகரில் விளையாடுகின்றன.
அதன்பின், 31ஆம் தேதி வங்கதேசமும் இலங்கையும் விளையாடுகின்றன. செப்டம்பர் மூன்றாம் தேதி வங்கதேசமும் ஆப்கானிஸ்தானும் பல பரிட்சை நடத்துகின்றன. செப்டம்பர் 5ஆம் தேதி இலங்கை ஆஃப்கானிஸ்தானும் மோதுகின்றன. இந்தத் தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் சூப்பர் 4 சுற்றில் மோத வாய்ப்பு உள்ளது.