
நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் நாளை இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மிக முக்கியமான போட்டி நடைபெறுகிறது. இலங்கை மண்ணில் போட்டி நடைபெற்றாலும் கூட ரசிகர்கள், போட்டி நடைபெறும் ஹோட்டல்களை நிறைத்திருக்கிறார்கள். இந்திய அணியில் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கு விக்கெட் கீப்பர் கே எல் ராகுல் விளையாட மாட்டார் என்று முன்பே தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இரண்டு போட்டிகளுக்குப் பிறகு அவரது உடல் தகுதி எந்த அளவிற்கு இருக்கிறது என்று பார்த்துதான் எதுவும் முடிவு செய்ய முடியும் என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருக்கிறார். இதன் காரணமாக இந்திய அணியில் சஞ்சு சாம்சன் எப்படியும் சேர்க்கப்பட மாட்டார். ஏனென்றால் அணியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அறிவிக்கப்பட்ட அணியில் இருந்து ஒருவரை நீக்க வேண்டும் என்பது விதி. இதன் காரணமாக இஷான் கிஷான் விளையாடுவது உறுதியாக இருக்கிறது.
இசான் கிஷான் விளையாடுகிறார் என்றால் துவக்க வீரரான அவரை எங்கு விளையாட வைப்பார்கள் என்கின்ற ஒரு கேள்வி இருக்கிறது. அவரை துவக்க இடத்தில் விளையாட வைத்தால், பல பேட்ஸ்மேன்களின் இடம் மாறும். இது உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணிக்கு சரியான திட்டமாக இருக்காது என்று எல்லோராலும் கூறப்பட்டது.