1-mdl.jpg)
சர்வதேச கிரிக்கெட் மிக வேகமாக மாற்றமடைந்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டை அணுகுவதில் கூட பெரிய மாற்றங்கள் உண்டாகி இருக்கிறது. இந்த நிலையில் குறுகிய வடிவ கிரிக்கெட் போட்டிகள் மிகுந்த மாற்றத்தை சந்தித்து வருகின்றன. அதிலும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்கள் பேட்டிங் செய்ய வேண்டிய தேவை அதிகரித்து இருக்கிறது. அதேபோல் பேட்ஸ்மேன்கள் ஒன்று இரண்டு ஓவர்கள் வீச வேண்டிய தேவையும் உருவாகி இருக்கிறது.
இப்படி இரண்டும் சேர்ந்த கலவையாக இருக்கும் அணிகள்தான், தற்போதைய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்கின்ற நிலை உருவாகி இருக்கிறது. இங்கிலாந்து கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய வெள்ளைப்பந்து அணியை 11 வீரர்களும் பேட்டிங் செய்யக்கூடிய அளவில் அமைக்க முடியும். அதே அணியில் குறைந்தது 7 வீரர்கள் பந்து வீசக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
தற்பொழுது இங்கிலாந்தை பார்த்து ஆஸ்திரேலியா அணியும் தனது பாணியை அதே வகைக்கு மாற்றி இருக்கிறது. தற்போது உலகக் கோப்பைக்கு வரை இருக்கும் ஆஸ்திரேலியா அணியின் எட்டாவது இடத்தில் கேமரூன் கிரீன் இல்லை மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் விளையாடும் அளவுக்கு மிக வலுவாக இருக்கிறார்கள்.