
At first, I was pissed: Hetmyer on Ashwin coming ahead of him to bat against CSK (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 50ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இப்போட்டியில் டெல்லி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது.
இப்போட்டியின் போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, அதிரடி வீரர் ஷிம்ரான் ஹெட்மையருக்கு முன்னதாக ரவிச்சந்திரன் அஸ்வினை களமிறகியது. இது பலருக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. ஏனெனில் ஹெட்மையர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர்.
ஆனால் அஸ்வின் பந்துவீச்சு ஆல்ரவுண்டர். அப்படி இருக்கையில் அஸ்வினை, ஹெட்மையருக்கு முன்னதாக அனுப்பியது பெரும் விவாதமானது. இந்நிலையில் தனக்கு முன்னதாக அஸ்வின் களமிறக்கப்பட்ட கோபமடையச் செய்தது என ஷிம்ரான் ஹெட்மையர் தெரிவித்துள்ளார்.