ஜோஸ் பட்லரின் கேப்டன்சி பதவிக்காலம் முடிவுக்கு வந்து விட்டது; முன்னாள் வீரர்கள் தாக்கு!
இங்கிலாந்து அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருவதன் காரணமாக ஜோஸ் பட்லரின் கேப்டன் பதவி முடிவுக்கு வந்துவிட்டதாக அந்த அணியின் முன்னாள் வீரர்கள் விமர்சித்துள்ளனர்.

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது.
அதேசமயம் இத்தொடரில் அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்திருக்கும் இங்கிலாந்து அணி லீக் சுற்றுடன் இத்தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இதனையடுத்து இங்கிலாந்து அணி மீதும் அந்த அணி வீரர்கள் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதிலும் ஜோஸ் பட்லர் தலைமையில் இங்கிலாந்து அணி சமீப காலங்களில் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியுள்ளதால் அவர் மீதும் முன்னாள் வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Trending
அதிலும் குறிப்பாக ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை, 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி டி20 உலகக்கோப்பை, தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடர் என அடுத்தடுத்து ஐசிசி தொடர்களில் படு தோல்விகளைச் சந்தித்துள்ளன. இந்நிலையில் தொடர் தோல்வியின் காரணமாக ஜோஸ் பட்லரின் கேப்டன்சி பொறுப்பு முடிவுக்கு வந்துள்ளதாக அந்த அணியின் முன்னாள் வீரர்கள் சாடியுள்ளனர்.
இதுகுறித்து பேசியா இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஆர்த்டன், “கேப்டனாக பட்லரின் காலம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன். ஐசிசி தொடர்களில் இங்கிலாந்து தங்களைத் தாங்களே மதிப்பிடுகிறது, மேலும் அவர்கள் இப்போது தொடர்ச்சியாக மூன்று மோசமான தொடர்களை எதிர்கொண்டுள்ளனர். அதில் இந்தியாவில் மோசமான 50 ஓவர் உலகக் கோப்பை, வெஸ்ட் இண்டீஸில் மறக்க முடியாத டி20 உலகக் கோப்பை, இப்போது இது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிர்ணயிச்ச தரத்தை விட மிகவும் கிழே சென்றுள்ளது. சில சமயங்களில் நமது யுக்திகள் சரியாக வேலை செய்யவில்லை எனில், அதனை ஒப்புக்கொண்டு அணியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்து நான் ஆழமாக சிந்திக்கிறேன், மேலும் அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லருக்கும் இது தெரியும் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அதேசமயம் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் நாசர், “நான் பட்லரை எப்போதும் 'ஆஹா, என்ன ஒரு கேப்டன்' என்று நினைத்ததில்லை. ஏனெனில் ஈயான் மோர்கனுக்கு இருந்த அணியை கையாளும் திறன், ஜோஸ் பட்லருக்கு எப்போதும் இருந்ததில்லை. மோர்கன் இங்கிலாந்தின் மிகச்சிறந்த வெள்ளை பந்து கேப்டன், அவர் எப்போதும் களத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டு அணியை முன்னோக்கி எடுத்துசெல்வார்.
Also Read: Funding To Save Test Cricket
ஒரு கேப்டனாக ஜோஸ் பட்லர் இந்த இங்கிலாந்து அணிக்காக எதையும் பெரிதாக செய்ததில்லை. மேலும் கேப்டன் பதவி அவரது பேட்டிங்கையும் பாதித்துள்ளது தெளிவாக தெரிகிறது. நீங்கள் ஒரு சிறந்த வீரரிடமிருந்து எதையாவது பறித்து, அவரது தலைமையின் கீழ் அணியால் எதையும் சாதிக்க முடியவில்லை எனில், நிச்சயமாக நாம் மாற்றத்தை செய்ய வேண்டிய நெரம் வந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now