
Australia Women vs England Women 1st ODI Dream11 Prediction: இங்கிலாந்து மகளிர் அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இத்தொடரில் இவ்விரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது.
அந்தவகையில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை சிட்னியில் உள்ள நார்த் சிட்னி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேற்கொண்டு இரு அணிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். சமபலத்துடன் இருக்கக்கூடிய இரு அணிகளும் நேருக்கு நேர மோதவுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
AU-W vs EN-W 1st ODI: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள்- ஆஸ்திரேலியா மகளிர் vs இங்கிலாந்து மகளிர்
- இடம் - நார்த் சிட்னி ஓவல் கிரிக்கெட் மைதானம், சிட்னி
- நேரம் - ஜனவரி 12, அதிகாலை 5 மணி