
இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் 2ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
கான்பெர்ராவில் நடந்து வரும் 2ஆவது டி20 போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் களமிறங்கியுள்ளன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்தியாவிற்கு எதிரான டி20 தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆகிய போட்டிகளில் கேமரூன் க்ரீன் தொடக்க வீரராக இறங்கிய நிலையில், டி20 உலக கோப்பை நெருங்குவதால், அதில் தொடக்க ஜோடியாக இறங்கும் வார்னர் - ஃபின்ச் ஆகிய இருவரும் இந்த போட்டியில் தொடக்க வீரர்களாக விளையாடுகின்றனர்.