
AUS vs NZ, 3rd ODI: Australia sweep ODI series against New Zealand in Aaron Finch's farewell (Image Source: Google)
நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 3 ஒருநாள் கொண்ட போட்டிகளில் இதுவரை 2-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் பெற்றிருந்தது.
இந்நிலையில் இரு அணிகளுகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி முதலில் பேட்டுங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 267 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இதில் அதிகபட்சமாக ஸ்மித் 105 ரன்களை எடுத்தார். மார்னஸ் லபுஷாக்னே 52 ரன்களும், அலெக்ஸ் கேரி 42 ரனகளும், கிரீன் 25 ரன்களும் எடுத்தனர்.