
பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணியானது 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது இன்று தொடங்கியது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக இப்போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 7 ஓவர்களை கொண்ட போட்டியாக இது தொடங்கியது. அந்தவகையில் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் மற்றும் மேத்யூ ஷார்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் முதல் ஓவரிலேயே பவுண்டரியும், சிக்ஸரையும் பதிவுசெய்து அதிரடியாக தொடங்கினர். இதில் 9 ரன்களை எடுத்த கையோடு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் தனது விக்கெடை இழந்தர். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசித்தளினார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடும் முயற்சியில் 7 ரன்களை எடுத்திருந்த மேத்யூ ஷார்ட் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.