Advertisement

ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், மூன்றாவது டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

Advertisement
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், மூன்றாவது டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், மூன்றாவது டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 02, 2024 • 06:32 PM

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ளன. அந்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 02, 2024 • 06:32 PM

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது. கடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள பாகிஸ்தான் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தாயகம் திரும்பும் முனைப்புடன் உள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் இப்போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளதால் இப்போட்டியில் அவரின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

Trending

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்
  • இடம் - சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி
  • நேரம் - அதிகாலை 5 மணி (இந்திய நேரப்படி)

நேரலை

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் செயலி மற்றும் இணையதளத்தில் நேரடியாகக் கிடைக்கும்.

நேருக்கு நேர்

  •     மோதிய போட்டிகள் - 71
  •     ஆஸ்திரேலியா - 36
  •     பாகிஸ்தான் - 15
  •     முடிவில்லை - 20

பிட்ச் ரிப்போர்ட்

போட்டி நடைபெறும் சிட்னி கிரிக்கெட் மைதானம் பேட்டர்களுக்கு தான் சாதகமாக அமையும். அதேசமயம் ஸ்பின்னர்களால் இந்த மைதனாத்தில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு உதவலாம்.

பிளேயிங் லெவன்

ஆஸ்திரெலியா: பாட் கம்மின்ஸ் (கே) டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்ச் மார்ஷ், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஜோஷ் ஹசில்வுட்.

பாகிஸ்தான்: சயீம் அயூப், அப்துல்லா ஷஃபிக், ஷான் மசூத், பாபர் ஆசாம், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான், சல்மான் அலி ஆகா, சஜித் கான், ஹசன் அலி, மிர் ஹம்சா, அமீர் ஜமால்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  •     விக்கெட் கீப்பர்: முகமது ரிஸ்வான்
  •     பேட்ஸ்மேன்கள்: ஷான் மசூத், பாபர் ஆசாம் (துணை கேப்டன்), டேவிட் வார்னர்(கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித்
  •     ஆல்ரவுண்டர்: டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ்
  •     பந்துவீச்சாளர்கள்: மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹசில்வுட், மிர் ஹம்சா, ஹசன் அலி

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement