Advertisement

AUS vs SA: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
AUS vs SA: Ashton Agar, Matthew Renshaw Get Opportunities As Australia Announce Squad For 3rd Test A
AUS vs SA: Ashton Agar, Matthew Renshaw Get Opportunities As Australia Announce Squad For 3rd Test A (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 30, 2022 • 12:04 PM

டீன் எல்கர் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 30, 2022 • 12:04 PM

இதையடுத்து நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவை இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி அசத்தியது.

Trending

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்யும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் இப்போட்டிக்கான பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே கேமரூன் க்ரீன் காயம் காரணமக விலகியுள்ள நிலையில், மிட்செல் ஸ்டார்க்கும் இப்போட்டியிலிருந்து விலகியுள்ளார். 

இதன் காரணமாக ஆல்ரவுண்டர் ஆஷ்டன் அகர், தொடக்க வீரர் மேத்யூ ரென்ஷா ஆகியோர் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் காயம் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் இப்போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுசாக்னே, அலெக்ஸ் கேரி ஆகியோர் தொடர்ந்து தங்களது இடங்களை டெஸ்ட் அணியில் தக்கவைத்துள்ளனர். 

ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, லான்ஸ் மோரிஸ், நாதன் லையன், மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement