
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியா vs ஸ்காட்லாந்து- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Australia vs Scotland Match 35 Dream11 Prediction, ICC T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரி 9ஆவது பதிப்பு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் 7 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில் இத்தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கான மீதமிருக்கும் ஒரு இடத்தில் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில் நாளை நடைபெறும் 35ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டியில் ஸ்காட்லாந்து அணி வெற்றிபெற்றால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இப்பொட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
AUS vs SCO: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs ஸ்காட்லாந்து
- இடம் - டேரன் சமி கிரிக்கெட் மைதானம், செயின்ட் லூசியா
- நேரம் - ஜூன் 16, காலை 6 மணி (இந்திய நேரப்படி)