
வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.
அதன்படி ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸேவியர் பார்ட்லெட், லான்ஸ் மோர்ஸ் ஆகியோர் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அலிக் அதானாஸ் - ஜஸ்டின் க்ரீவ்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் க்ரீவ்ஸ் ஒரு ரன்னிலும், அலிக் அதானாஸ் 5 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய கேசி கார்டி ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வர, மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் ஷாய் ஹோப் 12 ரன்களுக்கும், ஹோட்ஜ் 11 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர்.