
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றிபெற்றது. இருப்பினும் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கி தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெர்த்தில் நடைபெற்றது.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜான்சன் சார்லஸ் 4 ரன்களோடு பெவிலியன் திரும்ப, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரனும் ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழந்தார். அதன்பின் அதிரடியாக தொடங்கிய கைல் மேயர்ஸும் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.