
ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கு இரண்டவது டி20 போட்டியானது நேற்று எடின்பர்க்கில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் அதிரடி வீரர்கள் டிராவிஸ் ஹெட், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாலும், ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தினார். அவருக்கு துணையாக கேமரூன் க்ரீன், மார்கஸ் ஸ்டொய்ன்ஸ், டிம் டேவிட் ஆகியோரும் சிறப்பாக விளையாடி அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணியானது 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சதமடித்து அசத்திய ஜோஷ் இங்கிலிஸ் 103 ரன்களைச் சேர்த்தார். ஸ்காட்லாந்து தரப்பில் பிராட்லி கர்ரி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடி ஸ்காட்லாந்து அணியில் பிராண்டன் மெக்முல்லன் அரைசதம் கடந்து 59 ரன்களைச் சேர்த்தார்.