Advertisement
Advertisement
Advertisement

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த மார்கஸ் ஸ்டொய்னிஸ்!

ஒரு வருடத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் 300 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த மற்றும் 20 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த முதல் ஆஸ்திரேலிய வீரர் எனும் சதனையை மார்கஸ் ஸ்டொய்னிஸ் படைத்துள்ளார்.

Advertisement
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த மார்கஸ் ஸ்டொய்னிஸ்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 18, 2024 • 09:57 PM

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்றுடன் முடிவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடியேயான மூன்றாவது போட்டி இன்று நடைபெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan
November 18, 2024 • 09:57 PM

அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாமை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களைச மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக பாபர் ஆசாம் 41 ரன்களைச் சேர்த்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஆரோன் ஹார்டி 3 விக்கெட் வீழ்த்தினார்.

Trending

பின்னர் 118 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஷார்ட், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோஸ் இங்கிலிஸ் 27 ரன்களையும், ஆதிரடியாக விளையாடிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 27 பந்துகளில் 61 ரன்களைக் குவித்ததன் மூலம் ஆஸ்திரேலிய அணி 11.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. 

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியதுடன் பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. மேலும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வாகித்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆட்டநாயகன் விருதையும், தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்பென்சர் ஜான்சன் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.

இந்நிலையில் இந்த போட்டியில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் அரைசதம் அடித்ததன் மூலம் தனது பெயரில் ஒரு தனித்துவமான சாதனையை படைத்தார். அதன்படி ஒரு வருடத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் 300 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த மற்றும் 20 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த முதல் ஆஸ்திரேலிய மற்றும் நான்காவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

அந்தவகையில் நடப்பு 2024 ஆம் ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 330 ரன்கள் மற்றும் 21 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். இவருக்கு முன் வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன், இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா, ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா ஆகியோர் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் இந்த சாதனையை செய்துள்ளனர். இதில் சிக்கந்தர் ரஸா 2022, 2024ஆம் ஆண்டு என இரண்டு முறை இந்த சாதனையை படைத்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

ஒரு ஆண்டில் 300 ரன்கள் மற்றும் 20 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் (டி2ஐ-ல்)

  • 327 ரன்கள், 25 விக்கெட்டுகள் - ஷாகிப் அல் ஹசன் (வங்கதேசம்), 2021
  • 607 ரன்கள், 20 விக்கெட்டுகள் - ஹர்திக் பாண்டியா (இந்தியா), 2022
  • 735 ரன்கள், 25 விக்கெட்டுகள் - சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே), 2022
  • 462 ரன்கள், 21 விக்கெட்டுகள் - சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே), 2024
  • 330 ரன்கள், 21 விக்கெட்டுகள் - மார்கஸ் ஸ்டோய்னிஸ் (ஆஸ்திரேலியா), 2024

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement