
பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் முதன்முதலாக டி20 முறையில் மகளிா் கிரிக்கெட் ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. இதில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ஹர்மன்ப்ரித் தலைமையிலான இந்திய மகளிர் அணி, மெக் லெனிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் அலிசா ஹீலி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த் பெத் மூனி - கேப்டன் மெக் லெனிங் இணை ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினாலும், பின்னர் அதிரடி காட்ட தொடங்கியது.
இதில் மெக் லெனிங் 36 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த தஹிலா மெக்ராத்தும் 3 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். ஆனாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த பெத் மூனி அரைசதம் அடித்ததுடன் 61 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.